.
Blog Post

ஆயுர்வேதமும் உடல் தோஷ வகைகளும்


ஆயுர்வேதமும் உடல் தோஷ வகைகளும் 


ஆயுர்வேதம் என்பது ஆயுளை ஆரோக்கியமாக நீட்டிப்பதற்கான வழிமுறைகளைக் கூறும் வேதம் அல்லது மந்திரமே ஆயுர்வேதமாகும். ஒவ்வொரு நபரின் உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர சிகிச்சையளிப்பதே இதன் தனித்துவம். இது "தோஷங்கள்" எனப்படும் மூன்று முதன்மை ஆற்றல் வகைகளின் அடிப்படையில் நமது உடல் அமைப்பை வகைப்படுத்துகிறது. வாருங்கள் உங்கள் தனிப்பட்ட உடலுக்கான தோஷத்தை (Vatam, Pittam, Kapham) அறிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை அறியலாம்.


தோஷங்கள்: மூன்று பிரதான உடல் வகைகள்


1. வாதம் (Vatam)


   வாதம் ஆகாயம் மற்றும் காற்று கலவையாகும். இத்தகையவர்கள் பொதுவாக:


   - மெலிந்த உடல் 


   - வறட்சியான தோல் போன்ற அமைப்புடன் காணப்படுவர்.


   வாதம் குறையும்போது, உணவுக் கட்டுப்பாடு மற்றும் எண்ணெய் மசாஜ் போன்ற ஆரோக்கிய வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.


2. பித்தம் (Pittam)


   பித்தம் நெருப்பு மற்றும் நீரின் கலவையாகும். இத்தகையவர்கள்:


   - நடுத்தர உடல் அமைப்பு.


   - நல்ல செரிமான திறன்.


   - சூடான தோல் மற்றும் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்துடன் இருப்பர்.


   பித்தத்தை சமநிலைப்படுத்த, குளிர்ச்சியான உணவுகள் மற்றும் மன அமைதி பயிற்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.


3. கபம் (Kapham)


   - கபம் பூமி மற்றும் நீரின் கலவையாகும். இத்தகையவர்கள்:


   - வலுவான உடல் அமைப்புடன் காணப்படுவர்.


   - அமைதியான மனநிலையுடன், எளிதில் அலுப்படையாமல் இருப்பர்.


   - மெலிந்த மற்றும் பரந்த தோலுடன் காணப்படுவர்.


கபத்தை சமநிலைப்படுத்த, சுறுசுறுப்பு செயல்பாடுகள் மற்றும் சூடான உணவுகளைப் பழகிக்கிக்கொள்ள வேண்டும்.




உங்கள் தோஷத்தை எப்படி கண்டறிவது?


உங்கள் தோஷத்தை அறிய, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைத் தவிர, இணையதள கேள்விகளின் அடிப்படையிலும் உங்கள் தோஷத்தை கணிக்கலாம். பொதுவாக, உங்களுக்கு உடல் அமைப்பு, உணவு விருப்பம், மற்றும் ஆற்றல் நிலை போன்றவை தோஷங்களை அடையாளம் காட்டும்.


 தோஷத்தை அறிந்து கொண்டதால் கிடைக்கும் நன்மைகள்




சரியான உணவுப் பழக்கவழக்கங்கள்: உங்கள் தோஷத்திற்கேற்ப உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் செரிமானம் மேம்படும்.




ஆரோக்கிய மனநிலை: தோஷத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம் உடல் மற்றும் மனநிலையில் அமைதி கிடைக்கும்.




தொற்றுகளைத் தடுக்க உதவும்: தோஷங்கள் சரியாக இருக்கும்போது நோய் எதிர்ப்புத் திறன் உயரும்.




உங்கள் தோஷத்தை அறிந்து கொள்வது ஆரோக்கியத்தின் முதல் படியாகும். ஆயுர்வேதத்தின் வழிகாட்டுதலுடன் உங்கள் உடல் மற்றும் மனநிலையில் சமநிலையை ஏற்படுத்துங்கள். இப்போதே உங்கள் தோஷத்தை கண்டறியுங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடங்குங்கள்!


AYUTHRA KERALA AYURVEDA HOSPITAL © 2025 All rights reserved.